அம்பானி வீட்டு திருமணம் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி... அனுராக் காஷ்யப்பின் மகள் பகீர் ஸ்டேட்மெண்ட்!

 
அம்பானி

 இன்று ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் இனிதே நடைபெற்று வருகிறது. இத்திருமணத்திற்கு உலக தலைவர்கள் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள டிரஸ் கோட் முதல் அனைத்துமே பார்த்து  பார்த்து செய்யப்பட்டு வருகிறது.  

அம்பானி

2023ல்  ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 'சங்கீத்' விழாவில்  சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள்  கலந்து கொண்டனர்.இவர்களுடன்  தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, நடிகை அலியா பட், அட்லீ, பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவியும்  கலந்து கொண்டனர். இன்று திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது. பிரபலங்களை வரவேற்க 100 தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மும்பை முழுவதும் நட்சத்திர விடுதிகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஆனந்த் அம்பானி


இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அனுராக் காஷ்யப்பின் மகளான ஆலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து அவர்   "அம்பானி வீட்டு திருமணம்  ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி. என்னையும் திருமணத்தில் கலந்து கொள்ள  விளம்பரத்திற்காக அழைத்தார்கள். அதில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அதனால் நான் மறுத்துவிட்டேன்.  பணக்காரர்கள் தங்களது வாழ்க்கையை கவர்ச்சிகரமானதாகக் காட்டிக்கொள்கிறார்கள். பணத்தை வைத்து என்ன தான் செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!