கோர விபத்து... அதிர்ச்சி வீடியோ... மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்... உடல் கருகி உயிரிழந்த நோயாளி!

 
ஆம்புலன்ஸ்

 இன்று அதிகாலை கேரள மாநிலம், கோழிக்கோட்டில்  ஆம்புலன்ஸ் ஒன்று மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்ததில் ஆம்புலன்ஸில் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ளியேரியில் மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா (57) என்பவர், அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள எம்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை அழைத்து செல்லப்பட்டார். 
ஆம்புலன்ஸ் கல்லுத்தான்கடவு பகுதியின் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

ஆம்புலன்ஸ்
இதில் ஆம்புலன்ஸுக்குள் இருந்த நோயாளி சுலோச்சனா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கேரளத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் சுலோச்சனாவுடன் ஆம்புலன்ஸில் பயணித்த அவரது கணவர் சந்திரன், பக்கத்து வீட்டுப் பெண் பிரசீதா, ஒரு மருத்துவர், 2 நர்சிங் ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்  ஓட்டுநர் உட்பட 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
விபத்தில் உயிரிழந்த சுலோச்சனா நடன ஆசிரியையாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web