பகீர் வீடியோ... சடலத்தை இரு கால்களையும் பிடித்து தரதரவென இழுத்து செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

 
சடலம்

 உத்திரப்பிரதேச மாநிலத்தில்  ஜான்சியில் ஒரு பிரேத பரிசோதனை கூடம் செயல்பட்டு வருகிறது.   இங்கு இருவர் ஒரு இளைஞரின்  சடலத்தை துணியால் மூடிக்கொண்டு பின்னர் இரு கால்களையும் பிடித்துக் கொண்டு தரதரவனை இழுத்து அந்த பிரேத பரிசோதனை கூடத்திற்குள் இழுத்து போட்டனர்.

இது குறித்த   வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  சடலத்தை இழுத்து சென்றவர்கள் ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்கள் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் எப்போது நடந்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web