நெகிழ்ச்சி... தன் செல்ல மகளுக்கு ’இந்தியா’ என பெயர் சூட்டிய அமெரிக்க பெண்..? வைரல் வீடியோ!

 
இந்தியா
 


 
சமூக வலைதளங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் நாட்டுப்பற்றுக்கு பெயர் போன இந்தியா குறித்த வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த டிஜிட்டல் யுகத்திலும்  ஒரு குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர்  சமூகத்தில்  மனதை தொடும் அளவிற்கு பாசமோடு, தேசபக்தியோடு இருக்கிறது . 


இது குறித்து சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த  வீடியோவில், ஒரு அழகான சிறுமியிடம் அவளது பெயரை கேட்டபோது, அவள் “இந்தியா” என அப்பாவித்தனமாக பதிலளித்தார்.  அங்கிருந்த  அனைவரும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கினர். அந்தக் குழந்தையின் அழகான  மழலை  புன்னகை பார்வையாளர்களை சில வினாடிகளில் நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.


அந்த வீடியோவில், சிறுமியின் தாயார், “இந்தியா என்பது அழகான நாடு. அதனால்தான் என் செல்ல மகளுக்குப் அந்தப் பெயரைக் வைத்தேன்” எனக் கூறுவதை காணமுடிகிறது.  அவரது வார்த்தைகள், இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பன்முகத்தன்மைகான எடுத்துக்காட்டாக அமைகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தாயும் மகளும், இந்திய பண்பாடு  மூலம்  இந்தியர்களின் இதயங்களை கவர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?