உ.பி அமேதி தொகுதி.. காங்கிரஸ் வேட்பாளரிடம் படுதோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி!

 
ஸ்மிருதி இரானி

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேதி தொகுதியின் வேட்பாளராக கே.எல்.சர்மாவை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. முன்னதாக, அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

இந்த முறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா 5,39,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், ஸ்மிருதி இரானி 3,72,032 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, கட்சிக்காக உழைத்த பாஜகவினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அமேதி தொகுதி மக்களுக்கு எனது சேவையை தொடர்ந்து செய்வேன் என தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web