பிரபல ஐஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு... பொதுமக்கள் பாதிப்பு!

 
விஷவாயு கசிவு பஞ்சாப் தீயணைப்பு துறை மீட்பு பணி

தூத்துக்குடியில் தனியார் ஐஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடிக்கு குரூஸ் புரத்தைச் சேர்ந்த ஒயிட் என்பவருக்கு சொந்தமான ஐஸ் பிளாண்ட், ஜான் சேவியர் நகர் மீனவர் காலனி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஐஸ் பிலாண்டில் முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் அடிக்கடி அம்மோனியா கேஸ் வெளியேறி அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி

இந்நிலையில் நேற்று இரவு தனியார் ஐஎஸ் பிளாண்ட்டில் இருந்து அமோனியா வாயு வெளியேறியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து அம்மோனியா கேஸ் மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?