அதிர்ச்சி... டிராக்டர் ரோலரில் சிக்கி 8 வயது சிறுவன் பலியான சோகம்!

 
பரத்
 

வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே டிராக்டர் ரோலரில் சிக்கி விபத்துக்குள்ளான 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
வேலூர் மாவட்டம் கூக்கலபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தனது மகன் பரத்குமாரை தன்னுடைய விவசாய நிலத்திற்கு உடன் அழைத்துச் சென்றுள்ளார் தாமோதரன்.

ஆம்புலன்ஸ்
தன் நிலத்தில் நிலக்கடலை விளைவிப்பதற்காக டிராக்டர் மூலம் உழும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் ஏறியதில் பரத்குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற போலீசார், பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web