நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமி பலி... பெரும் சோகம்!

 
நூடுல்ஸ்

 சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்சை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. 2 மினிட்ஸ்ல செய்திடலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரம், டேஸ்டி மேக்கர்ஸ், எளிதான முறையில் சமையல் என பெட்டிக்கடைகள், மருந்தகங்கள் முதல் மால்கள் வரை சரம் சரமாக நூடுல்ஸ்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் சோஜன் ஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

நூடுல்ஸ்

இவர்களுடைய 8 வயது மகள்  ஜோவானா . இவர் அதே பகுதியில் உள்ள  பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.  ஜூலை 1ம் தேதி இரவு ஜோவானா தன்னுடைய வீட்டில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று நூடுல்ஸ் அவருக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

நூடுல்ஸ்

சிறிது நேரத்தில் ஜோவானா வீட்டிலேயே சாப்பிடும் இடத்தில்  மயங்கி சரிந்தார். உடனே அவரை  பெற்றோர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தகவலின் பேரில் விரைந்து வந்த  போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web