தொடரும் சோகம் ...தெருநாய் கடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!!

 
வெறி நாய்கள்

இந்தியாவில் நாய்க்கடியால் அடுத்தடுத்த  உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் பிளாக்கில், 8 வயது சிறுமி  மளிகை கடைக்கு சென்ற போது தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. சிறு காயம் ஏற்பட்டதும், சிறுகாயத்திற்கு மருந்து தேவையில்லை என நினைத்து அலட்சியமாக பெற்றோர் இருந்துள்ளனர்.  

நாய்


இதனை கவனிக்காமல் விட்ட நிலையில் சிறுமியின் உடல் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, சிறுமி பாஹ் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியைப் பார்த்த மருத்துவர்கள் ஆக்ராவின் எஸ்என் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு செல்லப்பட்டதும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து  சிறுமியின் தந்தை, “என் குழந்தைக்கு நாய் கடித்ததில் சிறு காயம் ஏற்பட்டது.

சிறுவன் பலி

இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும் என நினைத்தேன். இதேபோன்ற ஒரு சம்பவம் எனது அருகில் உள்ள மற்றொரு குழந்தைக்கு நடந்தது, சிறுவன் நன்றாக இருக்கிறான். ஆனால் எனது குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவளுக்கு அதிக காய்ச்சலால் பேச முடியவில்லை” என கண்ணீர் மல்கக்  கூறினார்.
 மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து   “தெரு நாய்களால் காயம் ஏற்பட்ட   குழந்தை 15 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர்   ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாயால் தாக்கப்பட்ட உடனேயே குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி  போடப்படவில்லை. நாய், பூனை மற்றும் குரங்கு கடித்தால், உடனடியாக ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போட வேண்டியது வது முக்கியம்.” என தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web