நெகிழ்ச்சி... எம்.ஏ., தேர்வு எழுதிய 81 வயது முதியவர்!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் திட்டக்குடி தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் நடைபெற்று வருகிறது.700க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வை, விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசின் தொழில் வணிக துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரராகவன் எனும் 81 வயது முதியவர் எழுதியுள்ளார்.

எம்.ஏ., பட்டத்திற்கான தேர்வில் நேற்று ஆங்கிலம் ஆங்கிலம் முதலாம் ஆண்டு தேர்வை எழுதினார். இவருக்கு ஒருங்கிணைப்பாளரும், முதன்மை கண்காணிப்பாளருமான லெனின் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பள்ளிப்படிப்போடு பலரும் கல்லூரிக்கு செல்ல தயக்கம் காட்டி வரும் நிலையில், சாதிப்பதற்கும், கற்பதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 81 வயது நிரம்பிய முதியவர் எம்ஏ தேர்வெழுதியது அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
