கோவையில் அதிர்ச்சி...காலையிலேயே நிறை போதை... சரக்கு வாங்க சென்றபோது விபத்து..!

 
கள்ளச்சாராயம்

தமிழகத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் விவகாரம். உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனையடுத்து களத்தில் இறங்கிய காவல்துறை, கள்ளச்சாராயம், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

எனினும் கள்ளச்சாராய மரணம் விவகாரம் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே  உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இரவு, பகல் பாராமல் ஏராளமானோர் வந்து மது வாங்கிச்செல்கின்றனர்.

கள்ளச்சாராயம்

அந்த வகையில், அதிகாலையில் அந்த  கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் ஒருவர் அமமுக கட்சிக்கொடி கட்டிய காரில் வந்துள்ளார். அவர் ஏற்கனவே போதையில் இருந்ததால் சாலையில் தாறுமாறாக காரை ஓட்டியுள்ளார். 

ஒருகட்டத்தில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்ற மின்மாற்றி மீது மோதியது. இதில்  மின்மாற்றி வெடித்ததுடன், காரின் மீது மின்மாற்றி சரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த மக்கள் முழு போதையில் இருந்த அந்த நபரை மீட்டு அவர் தப்பித்துவிடாமல் அமர வைத்தனர். 

கள்ளச்சாராயம்

இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web