ரூ.2.26 லட்சத்துக்கு ஏலம் போன முட்டை... நெகிழ வைத்த கிராம மக்கள்!
வடக்கு காஷ்மீரில் உள்ள மல்போரா கிராமத்தின் மஸ்ஜித் கமிட்டி மசூதி கட்டும் பணியை முடிக்க நிதி திரட்ட முடிவு செய்து, உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று நிதி கேட்டனர்.
அந்த ஊரில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், தன்னிடம் இருந்த ஒரு முட்டையை தானம் செய்து, தன்னால் நிதியுதவி அளிக்க முடியாது. அதனால் இந்த முட்டையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த முட்டையை ஏற்றுக் கொளவதைத் தவிர கமிட்டிக்கு வேறு வழியில்லை. ஆனால், முட்டையின் விலை 2.26 லட்சம் ரூபாய் என்று அவர்களுக்குத் தெரியாது.

மசூதி கமிட்டி தான் பெறும் அனைத்து நன்கொடைகளையும் ஏலம் விடுகிறது. அதே போல் மூதாட்டியிடம் இருந்து பெறப்பட்ட முட்டையையும் ஏலத்திற்கு விட்டது. தள்ளாத வயதிலும் மூதாட்டி கொடுத்த நன்கொடை கிராம மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏலத்தில் முட்டையின் விலையை ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு ஏற்றினார்கள். ஒவ்வொரு ஏலத்திற்குப் பிறகும், வாங்குபவர் அதிக பணம் திரட்டுவதற்காக மற்றொரு ஏலத்திற்கு அதைத் திருப்பித் தருவார்.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முட்டையை இறுதியாக ஒரு நபர் 70,000 ரூபாய்க்கு வாங்கினார், ஆனால் மீண்டும் மீண்டும் ஏலம் விடப்பட்டதால் மொத்த தொகை சுமார் ரூ.2.2 லட்சம் ரூபாயாக இருந்தது.
மல்போரா கிராமம் சோபோரிலிருந்து பந்திபூர் செல்லும் சாலையில், பிரதான நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இணையத்தில் பாட்டியின் செயலும், பாட்டியின் கொடையுள்ளதைப் புரிந்து கொண்ட கிராமத்தினரின் நெகிழ்ச்சியும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
