நெகிழ்ச்சி... முல்லை பெரியாறு கால்வாயில் விழுந்த யானை; தண்ணீரை நிறுத்தி யானையை மீட்ட அதிகாரிகள்!

 
யானை
 


முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாயில் யானை ஒன்று தவறி விழுந்து, வெளியேற முடியாமல் போராடிக் கொண்டிருந்த நிலையில், தண்ணீரை நிறுத்தி யானையை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு வெளியேற உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் தண்ணீர் சுமார் 2 கிலோ மீட்டர்  தூரத்திற்கு திறந்த வாய்க்காலில் வருகிறது. அதன்பிறகு தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தலை மதகு பகுதியிலிருந்து சுரங்க வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

வைகை அணை திறப்பு.. 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!
இந்நிலையில், நேற்றிரவு தேக்கடி வனப்பகுதியில் திறந்த வாய்க்காலை கடந்து சென்ற யானை ஒன்று தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளது. தண்ணீரின் வரத்து காரணமாக வேகம் அதிகமிருந்ததால், யானை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஷட்டர் பகுதிக்கு முன்னால் உள்ள கிரில் கம்பிகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது. இன்று காலை ஷட்டர் பகுதியில் யானை ஒன்று கிரில் கம்பிகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து நிற்பதைக் கண்ட தமிழக நீர்வளத்துறை உதவிப்பொறியாளர்கள்  இதுகுறித்து தமிழக அதிகாரிகளுக்கும், தேக்கடி கேரள வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அணை நீரேற்று

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழக நீர்வளத்துறையினர் யானையை உயிருடன் மீட்பதற்காக அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்தி, நீரின் இழுவை வேகத்தை முழுவதுமாக குறைத்தனர். இதையடுத்து யானை வந்த வழியே தேக்கடி ஏரிப்பகுதிக்கு நீந்திச் சென்றது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்காலில் நீந்திச்சென்ற யானை, ஆழம் குறைவான பகுதிக்குச் சென்றதும் நடந்து கரையேறி வனப்பகுதிக்குள் சென்றது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web