சாவிலும் இணை பிரியாத ஆதர்ச தம்பதி... கணவன் உயிரிழந்த சில நிமிடங்களில் மனைவியும் மயங்கி சரிந்து உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தில் வசித்து வருபவர் ராதா கிருஷ்ணன். 92 வயதான இவர் பத்திரப்பதிவு எழுத்தராக இருந்தார். இவரது மனைவி சரோஜா (82). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஒரு மகள் குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவில் பிரிவில் வசித்து வருகிறார்.

ராதாகிருஷ்ணன்-சரோஜா இருவரும் அவர்கள் வீட்டில் மகளுடன் இருந்தனர். வயது மூப்பின் காரணமாக ராதாகிருஷ்ணன் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். குடும்பத்தினர் சோகமாக இருந்த நிலையில், கணவணின் உடல் அருகே அழுதபடி உட்கார்ந்திருந்தார். சரோஜா துக்கம் தாங்காமல் திடீரென மயங்கி கணவரின் உடல் அருகே சாய்ந்துவிட்டார்.

உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து மின்மயானத்தில் இருவர் உடலும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணன்- சரோஜா தம்பதிகள் எப்போதும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வது வழக்கமாக இருந்தது. இறப்பிலும் இருவரும் பிரியாமல் ஒன்றாகவே உயிர்விட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
