மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் பரிதாப பலி!!

 
மாடு

சமீபமாக மாடுகள் முட்டித் தள்ளி  பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் நாய்கள் தொல்லையால் சின்னஞ்சிறுவர்கள் முதல் தொழிலதிபர் வரை உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.  சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களுக்குத் தலைவலியாக மாறியுள்ளன. இந்த மாடுகள் பொதுமக்களை விரட்டுவதும், திடீரென முட்டித் தாக்குவம் என அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மாடு

இதனை கட்டுப்படுத்த மாநாகராட்சி சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அக்டோபர் 18ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோவில் அருகே   மாடு முட்டியதில்  முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், சிகிச்சை பலனனளிக்காமல் இன்று அக்டோபர் 29ம் தேதி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். கடந்த 10 நாள்களாக முதியவர் சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆம்புலன்ஸ்


இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  முதியவர் சுந்தரத்தை முட்டிய காளை மாடுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதே போல் ஆவடியில்  வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு ஒன்று முட்டித் தள்ளியது. உடனே அப்பெண் குழந்தையுடன் பக்கத்து வீட்டிற்குள் ஓடி ஒளிந்து தப்பினார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web