எதிர்பாராதவிதமாக பாய்ந்த துப்பாக்கி குண்டு.. பரிதாபமாக பலியான சி.ஐ.எஸ். எப் வீரர்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தில் அணு உலை உள்ளது. மிக முக்கியமான இடம் என்பதால் கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று கல்பாக்கம் அணு உலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ரவிகிரண் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

வேலை முடிந்ததும் துப்பாக்கிகளை ஒப்படைக்க அணுமின் நிலைய ஒப்பந்தப் பேருந்தில் கிரணும் மற்ற தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரவிகிரண் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பேருந்தில் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராத விபத்தா? என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
