இளைஞரை உயிருடன் முழுங்கிய அனகோண்டா... திக் திக் நிமிடங்கள்... வைரல் வீடியோ!

 
அனகோண்டா

  2014ல் அமெரிக்க எழுத்தாளர் பால் ரோசாலி ஆபத்தான சண்டைக்காட்சி ஒன்றை நிகழ்த்த அமேசான் காடுகளுக்கு சென்றிருந்தார். இந்நிகழ்வை டிஸ்கவரி சேனல் நேரலை செய்தது. அதில்  ஒரு அனகோண்டா உயிருடன் மனிதனை விழுகுவதை அவர்கள் படமாக்க முடிவு செய்தார்கள். இதற்காக பால் ரோசாலி தனக்கான பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொண்டு அனகோண்டாவிற்கு அருகில் சென்று நின்று கொண்டார்.  


அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அனகோண்டா அவருடைய தலையை விழுங்க தொடங்கியது அடுத்ததாக உடலை சுற்றி வளைத்தது. இதனால் அச்சமடைந்த படக்குழுவினர் பால் ரோசாலியை தக்க பாதுகாப்பு உபகரணங்களை வைத்து அவரை மீட்டு விட்டனர். ரோசாலி தற்போது  அந்த பதைபதைக்கும் நொடிகளை குறித்து பேசி இருக்கிறார்.


இது குறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் தனக்கு கடைசியாக நினைவில் இருப்பது அனகோண்டாவின் வாய் அகலமாக திறந்தது.  அடுத்த சில நிமிடங்களில் இருட்டாக மாறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அனகோண்டா தன்னை சுற்றிக் கொண்டதும் விலா எலும்புகள் வெடிப்பதை போல உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அவருக்கு  ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டு சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது மெல்ல மெல்ல தான் இயல்பு நிலைக்கு திரும்பி  இருந்தாலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web