ஆனந்த் அம்பானி திருமணம்.. 4 நாட்களுக்கு மூடப்படும் மும்பை சாலைகள்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!

 
ஆனந்த் அம்பானி

அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்டு மும்பையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சனுக்கும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு பங்கேற்றனர். இதற்கிடையில், மும்பையின் முக்கிய இடங்களில் ஹோட்டல் அறைகள் விலை உயர்ந்துள்ளன.

ஆனந்த் அம்பானி

திருமணம் நடக்கும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய ஹோட்டல்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிராவல் மற்றும் ஹோட்டல் இணையதளங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்டு மும்பையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா வரும் 12ம் தேதி ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறவுள்ளது.

முக்கிய விருந்தினர்கள் வருவார்கள் என்பதால், பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வெல்ட் சென்டருக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் 12 முதல் 15 ஆம் தேதி வரை மூடப்படும் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அந்த சாலைகள்தான் மும்பை மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள் என்பதால், மும்பை காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிகழ்ச்சிகளுக்காக அரசு சாலைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web