நடவடிக்கை எடுக்காத திமுக அரசு... கஞ்சா போதை ஆசாமிகளால் தொடரும் அராஜகம்... இபிஎஸ் பேட்டி!

 
இபிஎஸ்

 தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருள் விற்பனையை நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி பேருந்து நிலையம் பகுதிகளில் அதிமுக சார்பில் இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழ வகைகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தண்ணீர்

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது வெளிமாநிலங்களில் இருந்து சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் கஞ்சா போதை ஆசாமிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களை கண்டித்த பெண்களை பட்டாக்கத்திக் கொண்டு தாக்கியுள்ளனர். அதில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் நாடு பின்னோக்கி செல்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளன. 
இந்த விவகாரங்கள் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது என்றார். மேலும் பேசியவர், “மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருத்து குறித்து இப்போது பேச முடியாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அது பற்றி கருத்து தெரிவிக்க இயலாது.

தண்ணீர் லாரி

தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் சாலைகளில் வந்து போராடுகிறார்கள். இந்த சூழலை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில்  மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் 8,000 ஏரிகள் ஆகிவற்றை தூர்வார அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு குடிமராமத்து திட்டம் என்பதை கிடப்பில் போட்டு விட்டது. மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கலந்த உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 20 சதவீத ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏரிகள் நிரம்பின. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. இது திமுக அரசு செய்த தவறு. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நல்லது நடக்கும் என்று நினைத்த தமிழக மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது மக்கள் துன்பமும் வேதனையும் அடைந்துள்ளனர்” என்றார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web