செப்டம்பர் 10 வரை தான் அன்புமணிக்கு கால அவகாசம்... ராமதாஸ் எச்சரிக்கை!
விருதுநகர் மாவட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது எழுப்பப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் கூறினார். இதற்கு பதில் அளிக்க ஆகஸ்ட் 31, 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

இதுவரை அன்புமணி பதில் அளிக்காததால், செப்டம்பர் 1ம் தேதி தைலாபுரத்தில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில், அவருக்கு செப்டம்பர் 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், அன்புமணி பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த முடிவு, தபால் மூலம் பதில் பெறுவதில் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு, நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது. முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
