காலியாகும் நாதக கூடாரம் ... மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து விலகல் !
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்தடுத்து அரசியலில் பெரும் அடி விழுந்து வருகிறது. நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர். இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இப்போதே அறிவித்ததன் காரணம் என்ன என கேட்டிருந்தார். மேலும் சீமான் கட்சியில் உள்ளவர்களை மதிக்கவில்லை எனவும் கட்சியிலிருந்து போகிறேன் என்று சொன்னால் போனால் போங்கள் என்று கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் சுதன்ராஜ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
