ஆந்திரா ரயில் விபத்து... பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு! முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு!

 
ரயில் விபத்து

ஆந்திராவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஆந்திராவில், நேற்று பயணிகள் ரயில்கள் இரண்டும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 12 பயணிகள் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.


நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கந்தகப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம் - பலாசா ரயில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று 2 ரயில்களும் மோதிக்கொண்டதில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் பயணிகள் அலறியடித்தனர். பலர் காயமடைந்த நிலையில், விபத்து குறித்த தகவல் அறிந்து ரயில்வே போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், மின்சார கம்பங்கள் சேதமடைந்து அந்த பகுதி முழுக்க மின்சாரம் தடைப்பட்டதால் மீட்பு பணிகள் தாமதமானது.

ரயில்வே போலீசாருடன், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ரயில் விபத்தை தொடர்ந்து மீட்பு பணிகளை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web