மாதுளை ஜூஸில் மயக்க மருந்து.. இன்ஸ்டா தோழரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 
மாதுளை ஜூஸ்

சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் ஒரு குழந்தை வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இன்ஸ்டாகிராமில் ஜெயக்குமார் என்ற நபருடன் பெண் டேட்டிங் செய்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கடந்த 6ம் தேதி காலை 9 மணிக்கு ஜெயக்குமாரை சந்திக்க ரெட்டேரி சந்திப்புக்கு சென்றார்.

இன்ஸ்டா

அங்கு, ஜெயக்குமார் மாதுளை பழச்சாறு வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து, அருகில் உள்ள லாட்ஜில் உள்ள தனது நண்பரை பார்க்க அழைத்துச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கி விழுந்தார். இதையடுத்து, மாலை 4.30 மணிக்கு அந்த பெண்ணை எழுப்பிய ஜெயக்குமார், மீண்டும் இருசக்கர வாகனத்தில் வரவழைத்து, ரெட்டேரி சந்திப்பில் இறக்கிவிட்டு ஆட்டோவில் மணலிக்கு அனுப்பி வைத்தார்.

வீடு திரும்பிய அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகையும் மாயமாகியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், "ஜெயக்குமார் என்னை எழுப்பி பார்த்தபோது, ​​பாதி மயக்கத்தில் இருந்ததால், உடைகள் அனைத்தும் அலங்கோலமாக இருந்ததால், ஜெயக்குமார், என்னை அவசரமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி, ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். இதனால், ஜெயக்குமார், மேலும் அந்த பெண்ணை அவரது நண்பர் பாலியல் பலாத்காரம் செய்தார்களா? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!