சாலையில் வழி விடாததால் ஆத்திரம்.. ஆட்டோ ஓட்டுநரை பொளந்து கட்டிய இளம்பெண்.. பகீர் வீடியோ வைரல்!

 
டெல்லி இளம்பெண்

இளம்பெண் ஒருவர்  இளைஞர் ஒருவரை நடுரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் சாலையில் இளம் பெண் ஒருவர்  புல்லட் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, ​​ஒரு ஆட்டோ டிரைவர் அவருக்கு வழி விடாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் பைக்கில் இருந்து இறங்கி ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவரது மண்டையை உடைத்துள்ளார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போக்குவரத்து நெரிசலால் வழி விட முடியவில்லை என ஆட்டோ டிரைவர் கூறினார். மேலும் இளம்பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web