காரை முந்தி சென்றதால் ஆத்திரம்.. ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கொடூரமாக தாக்கிய போதை ஆசாமிகள்!

 
ஜான்

கர்நாடகா மாநிலம் தும்கூரைச் சேர்ந்த தம்பதியின் ஐந்து மாத ஆண் குழந்தைக்கு துமாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், குழந்தையை தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து நேற்று மாலை தனியார் ஆம்புலன்சில் குழந்தையை பெற்றோர் பெங்களூருக்கு அழைத்து சென்றனர். அந்த ஆம்புலன்சை டிரைவர் ஜான் வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது பெங்களூரு அருகே நெலமங்களா அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த காரை முந்தி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள் ஆம்புலன்சை பின்தொடர்ந்தனர்.

நெலமங்களா சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் வேகம் குறைந்ததால், காரில் வந்த நான்கு இளைஞர்கள் ஆம்புலன்சை மறித்துள்ளனர். ஐந்து மாதக் குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் டிரைவர் கெஞ்சினார். ஆனால் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் டிரைவர் ஜானை தாக்கியுள்ளனர்.

இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி ஆம்புலன்சை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், டிரைவரை தாக்கிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web