ஸ்லீப்பர் கோச்சை ஆக்கிரமித்ததால் ஆத்திரம்.. நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பயணிகள்!

 
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் நிறுத்தத்தில் நின்றபோது, ​​முன்பதிவு செய்யாத பயணிகள் எஸ்1 பெட்டியை ஆக்கிரமித்தனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அப்போது அங்கிருந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொண்டபோது முறையான பதில் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் விருத்தாசலத்தை கடந்ததும் ரயிலை நடுவழியில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே அதிகாரிகள் சமாதானம் செய்ததையடுத்து ரயில் புறப்பட்டது. இதையடுத்து, அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது.

அப்போது முன்பதிவு செய்யாத பயணிகளை, ரயில்வே பாதுகாப்புப் படையினர், மாற்று பெட்டியில் அனுப்பி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், ரயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web