கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்.. பார்சலை அனுப்பி கொடூர கொலை.. தந்தை, மகள் பலி!

 
 ஜிதேந்திர வன்சாரா

குஜராத் மாநிலம், சபர்கண்ட் மாவட்டம், வேதா கிராமத்தில் வசிப்பவர் ஜிதேந்திர வன்சாரா, வயது 33. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சம்பவத்தன்று ஜிதேந்திராவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வந்தது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்த பார்சலை ஜிதேந்திரா திறந்து பார்த்தபோது, அருகில் அவரது இரண்டு குழந்தைகளும், உறவினர் ஒருவரின் குழந்தையும் இருந்தனர்.

பார்சலை திறந்து பார்த்தபோது அதில் எலக்ட்ரானிக் பொருள் இருந்தது. பின்னர் மின் இணைப்பு கொடுத்தபோது பார்சல் வெடித்தது. இதனால் அங்கிருந்த ஜிதேந்திர வன்சாரா மற்றும் பூமிகா, சாயா, ஷில்பா ஆகிய 3 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். இதில் ஜிதேந்திர வன்சாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், காயமடைந்த குழந்தைகள் வடலி அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஜிதேந்திர வன்சாராவின் 14 வயது மகள் பூமிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள குழந்தைகளில் ஒன்று மருத்துவமனையில் வென்டிலேட்டரில் அவசர சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் ஜிதேந்திராவின் வீட்டிற்கு பார்சலை டெலிவரி செய்ததாக நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

கொலை

இந்நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி வன்சாரா என்ற நபர் ஜிதேந்திர வன்சாராவின் வீட்டிற்கு இந்த பார்சலை அனுப்பி வைத்துள்ளார். ஜெயந்தி வன்சாராவின் மனைவியுடன் ஜிதேந்திரா திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்திருந்தது தான் அனுப்ப காரணம். இது குறித்து ஜெயந்தி வன்சாராவும் தனது மனைவிக்கு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெயந்தி வன்சாரா, சுரங்கத் தொழிலாளி என்பதால், பார்சலில் அம்மோனியம் நைட்ரேட்டை நிரப்பி,  ஜிதேந்திரனின் வீட்டுக்கு அனுப்பி, ஜிதேந்திரனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web