தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம்.. மனைவி கொடூர கொலை.. கணவன் வெறிச்செயல்!

கரூர் மாவட்டம் புகழூர் ரயில் நிலையம் அருகே உள்ள கொங்குநகரைச் சேர்ந்தவர் முருகையன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் பீகாரைச் சேர்ந்த புக்கர் மாஜி, இவரது மனைவி சண்மதிதேவி (வயது 46), சண்மதிதேவியின் சகோதரர் கிருஷ்ணா மாஜி ஆகியோர் சேர்ந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் பால் பண்ணையில் உள்ள தகர கொட்டகையில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், புக்கர் மாஜிக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் புக்கர் மாஜிக்கும், சண்மதிதேவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த புக்கர் மாஜி, கட்டை மற்றும் ஹாலோப்ளாக் கல்லால் சண்மதிதேவியின் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து புக்கர் மாஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமாஜி, பால் பண்ணை உரிமையாளர் முருகையனுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, அரவக்குறிச்சி துணை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர், ஜி.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஓம்பிரகாஷ், போசேசர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சண்மதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான புக்கர் மாஜியை தேடி வருகின்றனர். கள்ள தொடர்பை கண்டித்த பெண் கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!