சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. கடையை அடித்து நொறுக்கிய ரவுடியால் பரபரப்பு!

 
அருணாச்சலம்

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவர் கோவில்பட்டி - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கடந்த 15 ஆண்டுகளாக ஒத்தக்கடை என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த ரவுடி மதன்குமார் என்பவர் அடிக்கரி அவரது கடையில் சாப்பிட வருவார்ர். சில நாட்களுக்கு முன் வந்து ரூ.700க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார்.

இந்நிலையில், கஞ்சா போதையில் ஹோட்டலுக்கு வந்த ரவுடி மதன்குமார், இரண்டு புரோட்டா பார்சல் மற்றும் ஆம்லெட் கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் அருணாச்சலம் பழைய பாக்கியான ரூ. 700 கேட்டார். அதன்பிறகு ஓட்டல் உரிமையாளர் கேட்ட புரோட்டாவை தராததால் ரவுடி மதன்குமார் ஆத்திரமடைந்தார். ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து சேதப்படுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்தார். பின்னர், ஓட்டல் உரிமையாளட்ருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை மறித்து தகராறு செய்தார். ரவுடி மதன்குமார் அரிவாளால் தகராறில் ஈடுபட்டதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரிவாளுடன் நின்றிருந்த ரவுடி மதன்குமாரை சுற்றி வளைத்தனர்.

ரவுடி மதன்குமார் மீது ஓட்டல் உரிமையாளர் அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரவுடி மதன்குமாரை கைது செய்தனர். இந்நிலையில் ஹோட்டலுக்குள் அரிவாளுடன் நுழைந்த ரவுடி மதன்குமார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதுடன் ஹோட்டல் உரிமையாளரை கொலைமிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web