தன்னை கழற்றி விட்டதால் ஆத்திரம்.. 2வது கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய முதலாவது கள்ளக்காதலன்!

 
குமார்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகே கருவேலங்காட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழியிலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை

விசாரணையில், உயிரிழந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரைச் சேர்ந்த மீனவர் ராஜா (36) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் விக்னேஷ் (எ) விக்கி (22), அவரது தம்பி 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகியோரை போலீசார்  கைது செய்தனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

போலீசார் கூறியதாவது: மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த செல்வம் மனைவி அபூர்வம் (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த குமார் (51), ராஜா (36) ஆகிய 2 பேருடன் அபூர்வத்துக்கு தொடர்பு இருந்தது. பின்னர், அபூர்வம் குமாரனுடான பழக்கத்தை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், அபூர்வத்தின் மகன்களிடம் உங்களின் தாயுக்கு ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறியது மட்டுமின்றி,  தாய் ராஜாவுடன் உல்லாசமாக இருப்பதையும் நேரில் சென்று காட்டியுள்ளார்.

கைது

இதில் ஆத்திரமடைந்த மகன்கள் ராஜாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கருவேலங்காட்டில் வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், விக்கி மற்றும் அவரது 17 வயது சகோதரரை கைது செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web