காதலை கைவிட சொன்னதால் ஆத்திரம்.. மகளின் கண் முன்னே தந்தையை கூறுபோட்ட காதலன்!

 
 பிருந்தாவன் காலனி வியாபாரி கொலை

ஆந்திர மாநிலம் விஜயவாடா - பிருந்தாவன் காலனியில் வியாபாரி கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிருந்தாவன் காலனியில்  வியாபாரியை அவருடைய மகள் கண்முன்னே வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் வியாபாரியின் மகள் காதல் விவகாரம் என்று கூறப்படுகிறது. பவானிபுரம் செருவு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீராமச்சந்திர பிரசாத் (வியாபாரி) பிருந்தாவன் காலனியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.


இவரது மகள் தர்ஷினி இன்ஜினியரிங் மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் வித்யாதரபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இன்ஸ்டாவில் நட்பாக பழகி வந்தார். தர்ஷினி மற்றும் மணிகண்டனின் நட்பு காதலாக மலர்ந்து நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து மகளின் காதல் விவகாரம் தந்தை ராமச்சந்திர பிரசாத் அறிந்ததும், மகளை நன்றாகப் படித்து வாழ்க்கையில் செட்டிலாகி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார். அப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட தர்ஷினி மணிகண்டனை சில நாட்கள் ஒதுக்கி வைத்திருந்தாள்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டா, வியாழக்கிழமை பவானிபுரத்தில் உள்ள   ​​ராமச்சந்திரபிரசாத்  தனது மகளுடன் பைக்கில் சென்றபோது  எதிரே வந்த மணிகண்டன் தனது பைக்கால் மோதியுள்ளார். கீழே விழுந்த ராமச்சந்திர பிரசாத்தை மணிகண்டன் கையில் வைத்திருந்த கத்தியால் கொடூரமாக தாக்கினார். ரோட்டில் விழுந்து கிடந்த அப்பாவை அழைத்து வந்து உட்கார வைத்த தர்ஷினி .. உடனே மீண்டும் கத்தியால் வெட்டினான்.

காதலி தர்ஷினியின் அழுகையையும், கெஞ்சலையும் காதில் வாங்காத மணிகண்டன், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்றார். அதன் பிறகு தர்ஷினியை கொலை மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.

இதையடுத்து ராமச்சந்திர பிராசாத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிருஷ்ணாலங்கா போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, குற்றவாளி மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web