திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்.. பாட்டியை கொடூரமாக அடித்துக் கொன்ற பேத்தி!

 
தனலட்சுமி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி (வயது 70). இவரது மகன் பன்னீர்செல்வம். இவரது மனைவி புஷ்பவல்லி. தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா (25) என்ற 2 மகள்களும் உள்ளனர். பன்னீர்செல்வம் 15 ஆண்டுகளுக்கு முன்பும், சிவக்குமார் 10 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்டனர். சிவரஞ்சனிக்கு திருமணமாகி கருவேபிலங்குறிச்சியில் வசித்து வருகிறார். சிவசத்யா மட்டும் திருமணமாகாததால் தாய் புஷ்பவள்ளி மற்றும் பாட்டி தனலட்சுமியுடன் வசித்து வந்தார். அண்ணன் சிவக்குமார் இறந்த நாளில் இருந்து சிவசத்யா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் சிவசத்யா கடந்த சில நாட்களாக பாட்டி தனலட்சுமியிடம் இதுவரை ஏன் எனக்கு திருமணம் செய்யவில்லை என கூறி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையும் சிவசத்யா தனது பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சிவசத்யா, பாட்டி என்று கூட பார்க்காமல் அருகில் கிடந்த இரும்புக்கம்பியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த தனது தாயிடம் நடந்த சம்பவத்தை சிவசத்யா கூறியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி வீட்டுக்கு வந்து தனலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதனிடையே, தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேபிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைதுமியின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சம்பவம் குறித்து சிவசத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ​​பாட்டியை கொன்றேன். ஆனால் போலீசார் யாராவது என் அருகில் வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்ய முடியாமல் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதுகுறித்து, கருவேபிலங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணம் செய்யாத கோபத்தில் பேத்தி பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web