மது வாங்க கொடுத்த பணத்தை செலவு செய்ததால் ஆத்திரம்.. நண்பனை வெட்டிய கொடூர இளைஞர்!

 
சாதி சண்டை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் விநாயகம் என்கிற விநாயகமூர்த்தி (வயது 25). இவரும், திருவதிகை ஆயில்மில் தெருவை சேர்ந்த பஞ்சநாதன் மகன் பன்னீர் என்ற பன்னீர்செல்வமும் (34) நண்பர்கள். சம்பவத்தன்று பன்னீர்செல்வம், விநாயகமூர்த்தியிடம் ரூ.300 கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

ஆனால் விநாயகமூர்த்தி மதுவை வாங்காமல் பணத்தை செலவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து விநாயகமூர்த்தியிடம் பன்னீர்செல்வம் கேட்டபோது, ​​இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விநாயகமூர்த்தியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் பன்னீர்செல்வம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web