பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. இளம்பெண்ணை விரட்டி விரட்டி குத்திய கொடூரம்.. கள்ளக்காதலன் வெறிச்செயல்!

 
சிவரஞ்சனி

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு அருகே உள்ள கலாநகரை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 24). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கலாநகர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் சிவரஞ்சனி, பட்டகசாலியான்விளையில் கொசுவலை விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் கடைக்கு வேலைக்கு சென்றார். மதியம் அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது, கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

வாலிபர் சிவரஞ்சனியிடம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவரஞ்சனியை குத்த முயன்றார். பீதியடைந்த சிவரஞ்சனி, உயிரைக் காப்பாற்ற வாலிபரை தள்ளிவிட்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்திக்கொண்டே சாலையில் ஓடினார். ஆனால் அந்த வாலிபர் கோபத்தில் துரத்தினார். இறுதியில் கலாநகரப் பிள்ளையார் கோயில் அருகே சிவரஞ்சனியை வைத்து மடக்கிப் பிடித்து கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சிவரஞ்சனி அலறி துடித்தார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் ஓடி வந்து அவரை காப்பாற்றினர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து  தப்பி ஓடினார்.

கத்திக்குத்து தாக்கியதில் படுகாயம் அடைந்த சிவரஞ்சனியை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலுரப்பபுரம் பகுதியில் தப்பியோடிய வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. தான் ஏமாற்றப்பட்டதாக இளம்பெண் கதறி அழுதார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காதல்

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருங்கூர் அருகே அமராவதிவிளையை சேர்ந்த கொத்தனார் ஆன்டனி வினோ (33) என்பது தெரியவந்தது. அவருக்கும் சிவரஞ்சனிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்  கடைசியில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.
இந்நிலையில் சிவரஞ்சனி திடீரென ஆண்டனி வினோவிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஆண்டனி வினோ, இளம்பெண்ணை கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்தார்.அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்திக்குத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web