நிறைய நுங்கு வாங்கி சாப்பிட்டதால் ஆத்திரம்.. மனைவி, மகளை கத்தியால் கொடூரமாக தாக்கிய தந்தை கைது!

 
சாந்தினி

தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தனசேகரன் யாசின் தம்பதியினர் தங்கள் குழந்தைகளான சாந்தினி, ஷபானாவுடன் வசித்து வந்தனர். தனசேகரன், யாசின் இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். ஆனால் கணவரின் விவாகரத்து காரணமாக தாய் வீட்டில் மகள் இருந்த யாசினை தனசேகர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். லாரி ஓட்டுநரான தனசேகரன், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த போது, வெயிலின் தாக்கத்தை தவிர்க்க, அருகில் விற்பனை செய்த நுங்கனை வாங்கி சாப்பிட்டனர்.

அப்போது அவரது மனைவி யாசின் வந்து நிறைய நுங்கு  வாங்கி சாப்பிட்டுள்ளார். ஏன் இவ்வளவு நுங்கு வாங்கினாய் என்று யாசினிடம் கணவர் தனசேகர் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென ஆத்திரமடைந்த தனசேகர், மனைவி யாசினை கத்தியால் தாக்கினார். யாசினுக்கு வயிறு, மார்பு, தொடை, முதுகு என 10 இடங்களில் காயம் ஏற்பட்டது. மூத்த மகள் சாந்தினி, தனது தாயை தொடர்ந்து கத்தியால் தாக்குவதை அறிந்து, தடுக்க முயன்றார். அப்போது சாந்தினியை கத்தியால் தாக்கினார்.

இதில் சாந்தினிக்கு வயிறு, நெஞ்சு, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் சாந்தினி, யாசினி இருவரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் குடிபோதையில் இருந்த தனசேகர், மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதை அறிந்த பொதுமக்கள், அவரை பிடித்து  அவரை ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பலத்த காயம் அடைந்த யாசின், சாந்தினி ஆகிய இருவருக்கு அரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனசேகர் ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே நுங்கு வாங்கும் தகராறில் கணவன், மனைவி, மகள் ஆகியோர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web