மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்.. மனைவி, மகள்களை கொடூரமாக கொன்ற நபர் கைது!

 
தங்கராஜ்

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) என்ற இரு மகள்கள் உள்ளனர். தங்கராஜ் கூலி வேலைக்கு சென்று வந்தார். புஷ்பா வீட்டில் வேலை செய்து சம்பாதித்து வந்தார். இதனிடையே தங்கராஜ் ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை தங்கராஜ், தண்ணீர் தொட்டியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கிடப்பதாக கூறி அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தார். தங்கராஜ் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புஷ்பா, ஹரிணி, ஷிவானி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தங்கராஜை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கராஜ், மனைவி மற்றும் மகள்களை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்தாரா அல்லது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூவரும் இறந்தார்களா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் இருந்து தாய் மற்றும் மகள்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை

இதற்கிடையே தங்கராஜை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, ​​குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் தங்கராஜ் தகராறில் ஈடுபட்டார். ஆனால் புஷ்பா பணத்தை கொடுக்க மறுத்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தங்கராஜ் கோபத்தில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளினார். ஹரிணியை காப்பாற்ற புஷ்பா தண்ணீர் தொட்டியில் குதித்ததால், தங்கராஜ் இளைய மகள் ஷிவானியையும் தொட்டியில் வீசி  மூடியுள்ளார். பின்னர் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இதை தங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில், போலீசார் அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web