ஜூலை 7ம் தேதி திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடப்பாண்டுக்கான ஆனி மாத பிரம்மோற்சவம் ஜூலை 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவ விழாவும் ஒன்றாக கருதப்படுகிறது.
தட்சணாயன புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரம்மோற்சவ விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா ஜூலை 7ம் தேதி திங்கட்கிழமை சுவாமி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!