பிரபலங்களை பின்னுக்கு தள்ளி கவனம் ஈர்த்த அஞ்சலி மெர்ச்சண்ட்... ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம் !
உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று ஜூலை 12ம் தேதி நடைபெற்று வருகிறது.
இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது முதலே நீண்ட நெடிய திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கொண்டாட்டங்களில் அம்பானி குடும்பத்தினர் , உறவினர்களுடன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.இருப்பினும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்தில் அனைவராலும் உற்று நோக்கப்படுபவர் அஞ்சலி மெர்ச்சண்ட் மஜிதாவாக தான் இருக்க முடியும். கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அஞ்சலி மற்ற பல முண்ணனி பிரபலங்களையும் ஓவர்டேக் செய்து ஸ்டைலில் கலக்கி எடுக்கிறார். இதனால் அனைவரின் கவனமும் அஞ்சலி மீதே இருந்து வருகிறது.

இந்த அஞ்சலி ஆனந்த் அம்பானிக்கு மனைவியாகப் போகும் ராதிகா மெர்ச்சண்டின் சகோதரி தான் அஞ்சலி மெர்ச்சண்ட் மஜிதியா.இவர் தான் ஆனந்த் அம்பானியின் வருங்கால மைத்துனி . என்கோர் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சண்டின் மூத்த மகள். அஞ்சலி அமெரிக்காவிலும், லண்டனிலும் உயர்கல்வி பயின்றவர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
