அண்ணா பல்கலை கழக மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு!

 
அண்ணா பல்கலை கழகம்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் பொறியியல் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வி வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத வெளிநபர் கல்லூரி வளாகத்திற்குள் சுவரேறி குதித்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பெற்றோர்கள், மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி

இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் ஏற்கனவே 140 செக்யூரிட்டிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 பேரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைத்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆணை பிறப்பித்துள்ளது. வேலை செய்யாத சிசிடிவி கேமிராங்களை சரிசெய்யவும், முட்புதர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web