அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிர்ச்சி ஆய்வு.. வருடத்திற்கு 8 மாதம் நீடிக்க போகும் வெயில் காலம்!

 
கோடைகாலம் வெயில்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வில், ஆண்டுக்கு 8 மாதங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால், பல்வேறு நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பால், பல்வேறு நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலவுகிறது.

வெப்பம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி, தொடரும் நகரமயமாக்கலால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் 21 நகரங்களில் வெப்பம் அதிகரிக்கும். கோடை காலத்தை விட இரண்டு மடங்கு வெப்பம் அதிகரிக்கும். ஒரு வருடத்தில் 8 மாதங்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

மேலும் கடும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்பச் சலனம் தமிழகத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. வெப்பத்தை தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களில் குறுகிய காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. சராசரி மழைப்பொழிவு 2050-ல் 4 சதவீதமும், 2080-ல் 11 சதவீதமும், 2100-ல் 16 சதவீதமும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web