மத்திய அமைச்சரவையில் அண்ணாமலைக்கு பதவி.?!

 
அண்ணாமலை மோடி

 மக்களவை தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை என அறிகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் 11.24 சதவீதம் வாக்குகளை பெற்று தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது.  தோல்விக்கு மத்தியில் பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மீது பெரிய அதிருப்தியை தலைமை தெரிவிக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு  மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி  பதவியை கட்சி தலைமை அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அண்ணாமலை
ஏற்கனவே எல். முருகனுக்கு மத்திய  அமைச்சரவையில் இடம் அளித்திருந்த நிலையில்  2026ல் தமிழக தேர்தலை குறிவைக்கவும் தொடங்கியுள்ளது. இதனால் பாஜக அதன் இலக்கில் இருந்து தற்போது அண்ணாமலையை திசை திருப்பவும் பாஜக தலைமை விரும்பாது எனவும் சிலர் கூறுகின்றனர்.  மத்திய அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் அமைக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால் அப்போது இதற்கான பதில்கள் கிடைத்துவிடக்கூடும். இந்த தகவல்கள்  இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை , விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web