பரபரப்பு... மயங்கி விழுந்த மாவட்ட தலைவர்... காரிலேயே சாப்பிட்ட அண்ணாமலை, வானதி சீனிவாசன்!!

 
அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற் கொண்ட அண்ணாமலை நள்ளிரவில் சாலையோரம் காரில் அமர்ந்தபடியே இரவு உணவை சாப்பிட்டு முடித்தார். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும்  யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலை

ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.பல்லடம், அவிநாசி பகுதிகளில்  இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தில்   வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  அண்ணாமலை நடைப்பயணத்தில்  கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, திடீரென மயங்கி விழுந்தார் .

அண்ணாமலை

இதனால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.  இதன் பின்னர் கோவை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது காரை நிறுத்திய அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் இருவரும்  காரில் அமர்ந்தபடியே இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர்.  இந்த புகைப்படங்களை பாஜகவினர் தற்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு  வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறை தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web