திமுக அன்றும் , இன்றும்... ‘யார் அந்த SIR’ ... அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

 
ஸ்டாலின் அண்ணாமலை

தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன்  கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில்  இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த வழக்கு குறித்த FIR இணையத்தில் லீக் ஆகி அதில், யாரோ ஒரு சாருக்கு ஞானசேகரன் கால் செய்வது போல குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

‘யார் அந்த SIR’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.  இது குறித்து “ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஞானசேகரன் திமுக பிரமுகர்.’ என பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் பாலியல் வழக்க்கில் கைதான ஞானசேகரன் திமுக முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.  
இதனை திமுக தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அவர் திமுக உறுப்பினர் இல்லை. அவருக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை என கூறி வருகின்றனர். இன்று, முதல்வர்  ஸ்டாலினும்  அவர் திமுகவின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால் திமுக உறுப்பினர் அல்ல என கூறினார். 
இதனை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ” அமைச்சர் ரகுபதி பேசிய, ‘ஞானசேகரனுக்கும் எங்களுக்கும் (திமுக) எந்தவித தொடர்பும் இல்லை.’ என்பதும், அமைச்சர் கோவி.செழியன் பேசிய, ‘அண்ணாமலை சொல்வதால் அது ஒன்றும் அரசியலமைப்பில் எழுதப்பட்ட வாசகம் அல்ல. அது தவறான தகவல். எது நடந்தாலும் திமுகவை குறை சொல்வது அண்ணாமலை பிறவி குணம்.’ என பேசியது “அன்றும்” என குறிப்பிட்டு,  இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய, ” சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல. திமுக ஆதரவாளர். அதனை நாங்கள் மறுக்கவில்லை.” என கூறியதை மட்டும் எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.அத்துடன்  ” அன்று, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள். ஞானசேகரன் திமுக அனுதாபி (ஆதரவாளர்) தான். ஆனால், திமுக நிர்வாகி இல்லை என்கிறார்கள் இன்று. விரைவில் “யார் அந்த சார்?” என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web