தமிழகத்தில் மாஸ் காட்டிய அண்ணாமலை... 9 தொகுதிகளில் தொடர்ந்து 2வது இடம்!

 
அண்ணாமலை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், தற்போதைய முன்னணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளதும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதும் பாஜக தொண்டர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கடுமையான உழைப்பு காரணமாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வெளியாகி வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 229 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதகாகவும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேபோல் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி முகத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி தலா ஒரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகத்தில் பாஜக தனது வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்து வளர்ந்துள்ளது தொண்டர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் பின்தங்கினாலும், பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட்ட 23 தொகுதிகளில் தருமபுரியில் முன்னிலையிலும், 9 தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும், 12 தொகுதிகளில் தொகுதிகளில் 3ம் இடத்திலும், நாகை தொகுதியில் 4வது இடத்திலும் உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web