திமுகவை பின்னுக்கு தள்ளிய அண்ணாமலை... கெத்து காட்டும் பாஜக!

 
அண்ணாமலை
 

 தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கோவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில்  கோவை தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் திமுகவின் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்தார்.  பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின் தங்கினார். இரண்டாம் சுற்று முடிவில் அண்ணாமலை முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   திமுகவின் கணபதி ராஜ்குமாரும், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனும் பின்னிலை வகிக்கின்றனர். அதிமுக கோவையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

கோவை மக்களவைத் தொகுதிக்கான எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடிகல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களாக திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் , பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் , நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

அண்ணாமலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 9371 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் 5127,பாஜக வின் அண்ணாமலை 1852 வாக்குகள்,அதிமுகவின் ராமச்சந்திரன் 1541 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் அண்ணாமலை முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ராஜ்குமாரும், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனும் பின் தங்கியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web