ஹத்ராஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணத் தொகை அறிவிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டள்ளனர். இந்நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் திடீர் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், பலர் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தனர்.
அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஹத்ராஸ், அலிகர் எட்டா பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி இரங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் "உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆறுதல். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50000மும் நிவாரண நிதியாக வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோடியை தொடர்ந்து ஜனாதிபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் என பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!