இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு!

இலங்கையில் 2022ல் ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
அவராலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க முடியவில்லை. இதனால் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இம்முறை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சேவும் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். புதிய அதிபர் தேர்வுக்கான நடைமுறையை அந்நாட்டு நாடாளுமன்றம் தொடங்கி அதன்படி, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். முன்னதாக ராஜினாமா செய்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு முடிவடைவதால், அதுவரை புதிய அதிபர் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16ம் தேதி வரை நடைபெற தேர்தல் நடைபெற உள்ளது. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததற்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
இலங்கையை பொறுத்தவரை 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன. தேர்தலுக்காக 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 160 தேர்தல் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன. ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக 4 உறுப்பினர் என்ற வகையில் மொத்தமுள்ள 9 மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் . அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர். அந்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கடந்த 1978க்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி இலங்கை நாடாளுமன்றம் நேரடியாக அதிபரை தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!