4.8 ரிக்டர் அளவில் மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்... பூமிக்குள் புதையுண்ட வீடுகள்!

 
நிலநடுக்கம்

 

ஆப்கானிஸ்தானில் இன்று செப்டம்பர் 4ம் தேதி காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு 108 கி.மீ. கிழக்கே இந்திய நேரப்படி, இன்று காலை 10.40 மணிக்கு ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது. ஏற்கனவே நேற்று இரவு 11.53 மணிக்கு ஃபைசாபாத்துக்கு கிழக்கு - தென்கிழக்கே 62 கி.மீ. தொலைவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது.

நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!

ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் மாகாணங்களில் ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் குணார் மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,411 பேர் உயிரிழந்துள்ளனர். 

Breaking!! இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

மேலும் 3,124 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தலிபான் அரசு செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். ஆப்கனில் உருவான இந்த நிலநடுக்கம் பல மாகாணங்களைத் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சை செங்கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்க அதிா்வைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?