நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு... மேலும் ஒரு பாஜக எம்.பி. படுகாயம்... மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி!

 
முகேஷ்

 பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக எம்பி தள்ளிவிடப்பட்டதால் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் படுகாயம் அடைந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் ஆர்எம்எல் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் படுகாயமடைந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஆர்எம்எல் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

 பாராளுமன்ற குளிர்காலகூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. சுவர் மீது ஏறி கோஷமிட்டன. இதனால் அவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் தனது தலையில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமித் ஷா பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பேரணி நடைபெற்றது.  

 

 

அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள உள்ளே செல்ல முயன்றனர்.  அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்  தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜகவின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராகுல் காந்தி ஒரு தள்ளிய எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார்.

 

இச்சம்பவம் குறித்து  ராகுல் காந்தி  "உங்கள் கேமிராக்களிலேயே இது பதிவாகியிருக்கும். நான் நாடாளுமன்ற வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். பாஜக எம்பிக்கள் என்னை மறித்து தள்ளினார்கள், மிரட்டல் விடுத்தார்கள். அதனால் இது நடந்தது. தள்ளுமுள்ளு நடந்தது உண்மைதான். இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் பாதிப்படைய மாட்டோம். ஆனால், இது நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. அரசியலமைப்பை தாக்குவதும் அம்பேத்கரை அவமதிப்பதுமே முக்கிய பிரச்னை" எனக் கூறியுள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web