அச்சச்சோ!! மீண்டும் மின்கட்டண உயர்வு!!

 
மின்சார வாரியம்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான்  மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. 10 வருடங்களுக்கு மேலாக மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்சார வாரியம் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த விரும்பியது. அதற்காக, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்ட பின், 2022 செப்டம்பர், 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது.

TNEB

இதையடுத்து, வீடுகளுக்கு 400 யூனிட் வரை, 1 யூனிட்டிற்கு, 4.50 ரூபாய்; 401 - 500 வரை யூனிட்டிற்கு 6 ரூபாய்; 501 - 600 வரை யூனிட்டிற்கு 8 ரூபாய்; 601 - 800 வரை யூனிட்டிற்கு 9 ரூபாய்; 801 - 1,000 வரை யூனிட்டிற்கு 10 ரூபாய்; 1,001 மேல் யூனிட்டிற்கு, 11 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், வரும் 2026-27ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

TNEB

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்க அளவின் அடிப்படையில் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும்.தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web